இனவெறியுடன் வீரர் மீது வாழைப்பழம் எறிந்த ரசிகர்

குயில்பவுட்: உலக கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு  கத்தாரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் - துனிசியா அணிகள் நேற்று மோதின. பிரான்சின் பாரிஸ் பிரின்சஸ் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் பிரேசில் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. 2வது கோலை அடித்த  பிரேசில் வீரர் ரிச்சர்லிசன், அதைக் கொண்டாட கார்னர் பகுதிக்கு சென்றார். அப்போது கேலரியில் இருந்து ரசிகர் ஒருவர்  ரிச்சர்லிசன் மீது வாழைப் பழத்தை வீசியுள்ளார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த  ஆப்ரிக்க, அமெரிக்க  கலப்பினத்தைச் சேர்ந்த ரிச்சர்லிசன் கொண்டாட்டத்தை கைவிட்டு மீண்டும் களத்துக்குள் சென்றார். இனவெறியுடன் கூடிய இந்த செயலை பல்வேறு தரப்பினர் கண்டித்துள்ளனர். ஆட்டத்துக்கு பிறகு பேசிய ரிச்சர்லிசன், ‘அந்த ரசிகரை கண்டுபிடித்து தண்டிப்பதன் மூலம், இது போன்ற முறைகேடான செயலில் ஈடுபடுபவர்களுக்கு பாடம் புகட்டலாம்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: