தமிழகத்தின் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப். 28: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  தஞ்சை, திருவாரூர், நாகை,கள்ளக்குறிச்சி,மயிலாடுதுறை,கடலூர்,விழுப்புரம்,தி.மலை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப். 29: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

செப். 30 முதல் அக். 1: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.     

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நன்னிலம் 11 செ.மீ., கும்பகோணம் 10 செ.மீ., திருவாரூர், திருவிடைமருதூர் தலா 7 செ.மீ., வேலூர், பாடலூரில் 6 செ.மீ., லப்பைக்குடிக்காடு, வேளாங்கண்ணியில் 5 செ.மீ., அயனாவரம், தஞ்சையில் 4 செ.மீ., பெரம்பூர், திருக்குவளையில் தலா 3 செ.மீ., நாட்றம்பள்ளி, மன்னார்குடி, காட்பாடி, சென்னையில் தலா 2 செ.மீ., வாணியம்பாடி, அம்பத்தூர், கள்ளக்குறிச்சி, கலசப்பாக்கம், பெரம்பலூரில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: