அய்யலூர் கோயில் அருகே குட்டையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வண்டிகருப்பணசாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கிடாவெட்டி பூஜை செய்கின்றனர். பின்னர் விருந்து முடிந்ததும் பாத்திரத்தை கழுவும் கழிவுநீர் அருகில் உள்ள குட்டையில் தேங்குகிறது. இதனால் அந்த குட்டையில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும் கழிவுநீர் தேங்கும் குட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இலை கழிவுகள் கொட்டப்படுவதால் கொசு  தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: