பூதப்பாண்டி அருகே பரபரப்பு; மாட்டு கொட்டகையில் திடீர் தீ: பசு படுகாயம்

பூதப்பாண்டி: பூதப்பாண்டியை அடுத்த நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (56). விவசாயி. வீட்டில் தகர கொட்டகை அமைத்து பசுமாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல பசுமாடுகளுக்கு தீவனம் வைத்து விட்டு வீட்டில் படுத்து தூங்கி உள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பசுமாடுகள் வழக்கத்துக்கு மாறாக கத்தும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ராமசாமி வெளியே வந்து பார்த்தபோது வைக்கோல் போர் மற்றும் அருகில் இருந்த மாட்டு கொட்டகை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் போர் மற்றும் கொட்டகை முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இந்த தீ விபத்தில் 1 பசுமாடு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் பூதப்பாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: