ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் சர்வதேச அளவில் மாற்றம்: ஜெய்சங்கர் ஆச்சர்யம்

ஐநா :அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் 77வது ஐநா பொதுச்சபை கூட்டத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம்  பேசினார். பின்னர் அவர்  அளித்த பேட்டியில், ‘ஐநா.வில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று பல காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறை இந்த பிரச்னையில் நிச்சயமான மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. ஐநா சபை பொது விவாதத்தில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் பைடன், ஐநா கவுன்சிலில் நிரந்தர மற்றும் நிரந்தரம் அல்லாத பிரதிநிதிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா மற்றும் பல நாடுகள் இந்தியாவின் பெயரை குறிப்பிட்டுள்ளன’’ என்றார். ஐநா கூட்டத்தில் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக தகுதி உடையவர்கள் என்றும், இந்நாடுகளுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories: