காரைக்கால் அருகே சோகம் மியான்மரில் தவிக்கும் மகன் கவலையில் தாய் தற்கொலை

காரைக்கால்: காரைக்கால் அடுத்த மீனவ கிராமமான கிளிஞ்சல் மேடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஆட்சியம்மாள்(62). மீன்விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்களும், 2 மருமகளும், 4 பேத்திகளும் உள்ளனர். வடிவேலின் தம்பி சுப்பிரமணி, காத்தம்மாள் தம்பதியின் மகன் தீபமணியை (28) சிறுவயது முதல் வடிவேல், ஆட்சியம்மாள் தம்பதி வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9 மாதத்திற்கு முன் வேலை சம்பந்தமாக ஒரு தனியார் நிறுவனம் மூலம் துபாய்க்கு வேலைக்கு சென்ற தீபமணி, அங்கு 6 மாதம் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

பின்னர் அதே நிறுவனம் மூலம்   மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சைபர் கிரைம் எனப்படும் சட்ட  விரோத செயல்களில் துப்பாக்கி முனையில் ஈடுபடுத்தப்பட்டார். இதனால்  வேதனையடைந்த தீபமணி, தனது குடும்பத்தினரிடம் போனில் பேசி அழுது புலம்பி  தன்னை சொந்த நாட்டுக்கு அழைத்து செல்ல வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், தீபமணி பற்றி கவலையில் இருந்து வந்த ஆட்சியம்மாள், நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: