கலிஃபோர்னியாவில் உலக அலைச்சறுக்கு லீக் போட்டி!: மகளிர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை சாம்பியன்..ஆர்ப்பரிக்கும் அலையில் தந்திரமாக சறுக்கி அசத்தல்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்று வரும்  உலக அலைச்சறுக்கு லீக் போட்டியில் பிரான்ஸ் மற்றும் பிரேசில் வீரர், வீராங்கனைகள் வாகைச் சூடியுள்ளனர். லெமுரே என்ற இடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட அலைச்சருக்கு களத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் பங்கேற்ற பிரான்ஸ் வீராங்கனை ஜோஹன்னே டிஃபே தனக்கு உரிய பாணியில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற்றார். 
4 முறை சாம்பியனான அமெரிக்காவின் கேர்சியா மேரோவை அரைப்புள்ளி வித்தியாசத்தில் டிஃபே தோற்கடித்தார். இதேபோன்று ஆடவர் பிரிவில் பிரேசிலை சேர்ந்த பிலிப் டோலிடோ மகுடம் சூடினார். இந்த வெற்றி மூலம் உலக தரவரிசை பட்டியலில் 2ம் இடத்திற்கு டிஃபே முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் 5ம் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

The post கலிஃபோர்னியாவில் உலக அலைச்சறுக்கு லீக் போட்டி!: மகளிர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை சாம்பியன்..ஆர்ப்பரிக்கும் அலையில் தந்திரமாக சறுக்கி அசத்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: