திருநின்றவூரில் ஆரம்ப சுகாதார பயிற்சி மையம்: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்

ஆவடி: ஆவடி அருகே திருநின்றவூரில், தனியார் மருத்துவ குழுமம் சார்பில், சுமார் ரூ.6 கோடி மதிப்பில், 3 மாடிகளுடன் ஆரம்ப சுகாதார பயிற்சி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மருத்துவ குழும தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆரம்ப சுகாதார பயிற்சி மையத்தை குத்து விளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்  மருத்துவ குழும இயக்குனர் சக்திகுமார், சரண்யா, திருநின்றவூர் நகர்மன்ற தலைவர் உஷாராணி ரவி, துணை தலைவர் சரளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: