மாணவிகளை மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள சிலிப்பி என்ற கிராமத்தில் கோவில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் திருவிழாவை காண வந்திருந்தனர். இந்த திருவிழாவிற்கு வந்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்த பிரவின் (24), வீரசோழனை சஞ்சய் (19), மேலப்பருத்தியூர் பூப்பாண்டி (19) ஆகிய மூன்று பேரும், மது போதையில் எழுவனூர் கிராமத்திற்கு பள்ளி சென்று கொண்டிருந்த மாணவிகளை ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த கிராம மக்கள் 3 இளைஞர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மண்டலமாணிக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர்.

Related Stories: