அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 75 கிலோ கொண்ட நெல் மூட்டை ரூ.2001-க்கு விற்பனை-விவசாயிகள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை : அம்மூர்  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 75 கிலோ கொண்ட 606 வகை நெல் உயர்ந்த விலையாக நேற்று ரூ.2001-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 75 கிலோ கொண்ட 606 வகை நெல் உயர்ந்த விலையாக ரூ.2001 க்கு நேற்று விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று அம்மூர் ஒழுகுமுறை விற்பனைக் கூடத்திற்கு 2500 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. 75 கிலோ நெல் மூட்டைகளின் விலை விவரம் பின்வருமாறு:

ஏடிடி 37 வகை குண்டு நெல் குறைந்த பட்ச விலையாக குறைந்த விலையாக ரூ. 1477 க்கும் உயர்ந்த விலையாக ரூ.1259 க்கும், கோ 51 வகை நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1000 க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 1389 க்கும், 606 வகை நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1119 க்கும், உயர்ந்த விலையாக ரூ.2001க்கும், சோனா வகை நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1266 க்கும் மற்றும் உயர்ந்த பட்ச விலையாக ரூ.1296 க்கும், சூப்பர் பொன்னி வகை நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1250 க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1369க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது விவசாயிகள் அம்மூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்து வரும் நெல் மூட்டைகள் தற்போது சற்று அதிகமாகி உள்ளது. மேற்கண்ட இந்த நெல் மூட்டைகள் அன்றன்றே விற்பனை செய்யப்பட்டு அன்றே விவசாயிகளுக்கு வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் நெல் மூட்டைகள் அதிகளவில் எடுத்து வருகின்றனர். மேற்கண்ட தகவலை அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்தார்.

Related Stories: