சோலார் பேனல்களை வாங்க இந்தியா, சீனாவிடம் கடன்: இலங்கை அமைச்சர் தகவல்

கொழும்பு:  மின்சாரக்  கட்டண உயர்வைக் குறைப்பதற்கான தீர்வாக சோலார் பேனல்களை கொள்முதல்  செய்வதற்கு இந்தியா அல்லது சீனாவின் கடனுதவியைப் பெற இலங்கை  உத்தேசித்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2013ம்  ஆண்டுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணம் சராசரியாக 75  சதவீதம் உயர்த்தப்பட்டது.

இதனாக் மாதந்திரா கட்டணம் தாங்க முடியாத அளவிக்கு  ஏறி உள்ளதாக கூறி பௌத்த மதகுருமார்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி  தூக்கினர். மேலும், மின்சார கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த வேண்டாம் என  தெரிவித்தனர். இந்நிலையஇலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பேசியதாவது: 48,000க்கும்  அதிகமான நுகர்வோர் இணைப்புகள் மத ஸ்தலங்களுக்கு உள்ளன.

அவர்களில்  15,000க்கும் மேற்பட்டவர்கள் மாதத்திற்கு 30 யூனிட்டுகளுக்கு குறைவாகப்  பயன்படுத்துகிறார்கள், எனவே கட்டண உயர்வால் பெரிய அளவில்  பாதிக்கப்படவில்லை. எங்களுக்கு  அன்னியச் செலாவணி பிரச்னை உள்ளது. இதனால் இறக்குமதிக்கு பணம் செலுத்துவது  கடினம். மின்சாரக்  கட்டண உயர்வைக் குறைப்பதற்கான தீர்வாக சோலார் பேனல்களை கொள்முதல்  செய்வதற்கு இந்தியா அல்லது சீனாவின் கடனுதவியைப் பெற இலங்கை  உத்தேசித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: