கோதாவரி-காவிரி இணைப்பு பற்றி பேசினோம் அமித்ஷா சந்திப்பு குறித்து எடப்பாடி புது விளக்கம்

சென்னை: கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினோம் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். அமித்ஷாவை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். குறிப்பாக கோதாவரி -காவிரி இணைப்பு திட்டம் பற்றி பேசினோம். அடுத்ததாக, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அறிவித்த திட்டமான, ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற ஒரு திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். காவிரி நதியில் கலக்கின்ற மாசுபட்ட நீரை சுத்தம் செய்து காவிரியில் விடுவதற்காக முன் வைத்த திட்டம் அது. இந்த திட்டத்தை பிரதமர் இரு அவையின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையில் இடம் பெற்று அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தை வேகமாக துரிதமாக நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளோம். பிரதமரை சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை., தற்போது அந்த திட்டமும் இல்லை.   இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில், ‘‘அதிமுக உள்கட்சி விவகாரம் என்பது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் பார்வையில் உள்ளது. அதனால் அது குறித்து எந்த கருத்தையும் வெளியிட முடியாது. அப்படி தெரிவிக்கும்பட்சத்தில் அது சர்ச்சையாகிவிடும் என்றார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறோரே என்ற நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில், ‘‘அதற்கு ஓபிஎஸ்தான் விளக்கம் அளிக்க வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் என சுமார் 20 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டோம். இதை தொடர்ந்து மீதமுள்ள மாவட்டங்களிலும் அதிமுக தரப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும்’’ என்றார். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்துக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம்தான் எடப்பாடி மனு அளித்திருக்க வேண்டும். ஆனால், அமித்ஷாவிடம் மனு அளித்துள்ளார் என்று கிண்டலாக கூறுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

Related Stories: