அறநிலையத்துறை சார்பில் 115 தொன்மையான கோயில்களில் திருப்பணி: வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் 115 தொன்மையான கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்தது. சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 40வது வல்லுநர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ பட்டர், சந்திரசேகர பட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியார், சிவஸ்ரீ கே.பிச்சை, தலைமை பொறியாளர் (ஓய்வு) முத்துசாமி, தட்சிணாமூர்த்தி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர்கள் மூர்த்தீஸ்வரி, ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் வாழப்பாடி, தான்தோன்றீஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில், தர்மபுரி காரிமங்கலம், செல்லியம்மன் கோயில், நாமக்கல் செங்கோடு, கைலாசநாதர் கோயில், கீரம்பூர், எட்டுக்கையம்மன் கோயில், தஞ்சாவூர் பூதலூர், ஆதிவிநாயகர் கோயில், புதுக்கோட்டை ராஜாமடம், காசி விஸ்வநாதர் கோயில், திருச்சி திருவரங்கம், வரதராஜப் பெருமாள் கோயில், திருவாரூர் விளமல், காளியம்மன் கோயில், மன்னார்குடி, மீனாட்சி சொக்கநாதசுவாமி கோயில், விழுப்புரம் செஞ்சி, திரௌபதியம்மன் கோயில், கள்ளக்குறிச்சி கொங்கராயப்பாளையம், லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், வேலூர் அணைக்கட்டு, பீமநாதீஸ்வரர் கோயில் உட்பட 115 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

Related Stories: