சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணி மீண்டும் தொடங்கியது..

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமிகளுக்கு ஏராளமான நகைகள் உள்ளது. இந்த நகைகள் அனைத்தும் முதன் முதலாக கடந்த 1955 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பிறகு பல்வேறு கால கட்டங்களில் நகைகள் சரிபார்ப்பு ஆய்வு நடந்த நிலையில், கடைசியாக கடந்த 2005 ஆம் ஆண்டு மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் நகை சரிபார்ப்பு ஆய்வு துவங்கி உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணி மீண்டும் தொடங்கியது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் உள்ளது. இந்த நகைகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சரிபார்க்கப்பட்டு ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட குழு நகை சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் 3 கட்டங்களாக நகை சரிபார்ப்பு பணி  நடைபெற்று வருகிறது. 2005 முதல் 2017 வரை கோயிலுக்கு வந்த நகைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளது. 13-வது நாளாக 4-வது கட்டமாக கோயில் நகைகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

Related Stories: