பா.ஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வருகை

சென்னை: பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா 2 நாள் பயணமாக 22ம் தேதி தமிழகம் வருகிறார். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 22ம் தேதி காரைக்குடிக்கு வருகிறார். அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்குடியில் நடைபெறும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.தொடர்ந்து இரவு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசுகிறார். 23ம் தேதி காரைக்குடியில் காலை 11 மணிக்கு நடைபெறும் பிற்பட்ட, மிக பிற்பட்ட அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: