தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தைபே: தைவானின் தென் கிழக்கு  பகுதியில் நேற்று  மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் குறித்து எந்த விவரமும்  உடனடியாக தெரியவில்லை. ஆனால் கடைகளின் அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள்  அதிர்வினால்  கீழே விழுந்ததாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தால் கவுஷியுங்க் நகரின் மெட்ரோ ரயில் சேவை உடனே நிறுத்தப்பட்டது. இதன் அதிர்வுகள் தைபேயிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: