லெபனான் நாட்டில் பெண் ஒருவர் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் தன் பணத்தையே கொள்ளையடித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் லெபனான் நாட்டில் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அவசரகாலத்திற்கு பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஷலி ஹபீஸ் என்ற பெண் தன்னுடைய சகோதரியின் புற்றுநோய் சிகிச்சைக்காக வெய்ரூட் புளோம் வங்கியில் இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்தார். சகோதரியின் சிகிச்சையை முன்னிட்டு வங்கியில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முயன்றிருக்கிறார்.
