ராஜஸ்தானில் 100 நாள் நகர்புற வேலை திட்டம்: முதல்வர் கெலாட் தொடங்கி வைத்தார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 100 நாள் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை முதல்வர் அசோக் கெலாட் நேற்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் ஒன்றிய அரசின் நிதி மூலமாக கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதேபோல், நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பு இல்லாத மக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் நகர்ப்புற வேலைவாய்ப்பு என்ற திட்டத்தை ராஜஸ்தான் அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘இந்திரா காந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்,’ என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் அசோக் கெலாட் நேற்று தொடங்கி வைத்தார். 18 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் இந்த திட்டத்தில் சேருவதற்கு தகுதி வாய்ந்தவர்கள். பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் 2.5 லட்சம் குடும்பங்கள், இந்த வேலைக்காக முன்பதிவு செய்துள்ளன. இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர் மற்றும் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.

Related Stories: