திருச்செங்கோட்டில் ₹6.78 லட்சத்திற்கு பருத்தி, எள் விற்பனை

திருச்செங்கோடு : திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று வாராந்திர  பருத்தி ஏலம் நடந்தது. முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிராநல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து விவசாயிகள் 245 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர்.

இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹9,369 முதல் ₹10,390 வரையும், சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹9,096 முதல் ₹10,296 வரையிலுமாக ₹6.15 லட்சத்துக்கு விற்பனையானது.

தொடர்ந்து எள் ஏலம் நடந்தது. விவசாயிகள் 10 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இதில் வெள்ளை எள் கிலோ ₹128.60 முதல் ₹133 வரையிலுமாக ₹63 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மற்றும் எள் ஆகியவை ₹6.78 லட்சத்துக்கு விற்பனையானது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: