திருத்தணி: திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை துணை மின் நிலையத்தில் கே.ஜி.கண்டிகை, ஆதித்யா நகர் பகுதிகளில் 25 கி.வோ. திறன் கொண்ட மின்மாற்றியும் தெற்கு தெரு பஜனை கோயில் பகுதியில் 63 கி.வோ திறன் கொண்ட மின்மாற்றியும் திருத்தணி துணை மின் நிலையத்தில் முஸ்லிம் நகர், சீனிவாசபுரம், ஏரிக கால்வாய் பகுதியில் முதன்மை திட்டத்தின் கீழ் 100 கி.வோ. திறன் கொண்ட மின்மாற்றியும் பொன்பாடி மேட்டு காலனி ரேஷன் கடை அருகே தட்கோ திட்டம் மூலம் 25 கி.வோ. மின் மாற்றியும் பூனிமாங்காடு துணை மின் நிலையம் பி.வெங்கடாபுரம் பகுதியில் தலா 63 கி.வோ. திறன் கொண்ட இரண்டு மின்மாற்றிகள், கொல்லகுப்பம் பெருமாள் கோயில் தெருவில் 63 கி.வோ. திறன் கொண்ட மின் மாற்றி என்று 8 மின்மாற்றிகள் 37.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.