சிரியா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல்: விமான நிலைய ஓடுபாதை சேதம்

துபாய்: சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் விமான நிலைய ஓடுபாதை பலத்த சேதம் அடைந்தது. சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்தே, சிரியாவின் அரசுப் படைகளுக்கு எதிராகவும், அரசுப் படைகளுக்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு எதிராகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் விமானங்கள் தங்கள் நாட்டில் உள்ள விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக சிரியா தெரிவித்துள்ளது. சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள விமான நிலையத்தில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதில் ஓடுதளத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. குண்டுவீச்சின் காரணமாக விமான நிலையத்தின் சில பகுதிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது தொடர்பாக சிரிய வெளியுறவு துறை அமைச்சகம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல் மீது புகார் அளித்துள்ளது. ஆனால், இது குறித்து இஸ்ரேல் கருத்து எதுவும் கூறவில்லை. பல வருடங்களாக நடந்த போருக்கு பின்னர் கடந்த 2020ம் ஆண்டு முதல்  அலெப்போ மற்றும் டமாஸ்கஸ் விமான நிலையங்கள்  மீண்டும் செயல்பட தொடங்கின.

Related Stories: