அமெரிக்காவுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்த சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபர் மரணம்; உலக தலைவர்கள் இரங்கல்

மாஸ்கோ: அமெரிக்காவுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்த சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபர் மிகைல் கோர்பசோவ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பின் சோவியத் ரஷ்யாவும், அமெரிக்காவும் பல்வேறு முனைகளில் பனிப்போரை நடத்திக்கொண்டு இருந்தன. இந்தப் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு உயர்த்தி வரலாற்றிலும் உயர்ந்து நிற்கும் வித்தியாசமான அரசியல் தலைவரின் பெயர் மிகைல் கோர்பசோவ் என்பவராவார். இவர்தான் சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபராக இருந்தார். தற்போது மிகைல் கோர்பச்சேவ்வுக்கு 91 வயதான நிலையில், உடல்நலக் குறைவால் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவரது மறைவுக்கு ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மிகைல் கோர்பச்சேவ் கடந்த 1931ம் ஆண்டு ரஷ்யாவின் பிரிவோலியில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1971ம் ஆண்டில் அவர் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் உறுப்பினரானார். 1985ல் கட்சியின் பொதுச் செயலாளரானார். பின்னர் அவர் சோவியத் ஒன்றியத்தின் எட்டாவது அதிபதியானார். 1991ல் சோவியத் ரஷ்யா உடைந்தவுடன், அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்காவுடனான பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக கடந்த 1990ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு மிக்கைல் கோர்பசோவ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: