விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தின் அரசு ஊழியர் குடியிருப்பு கட்டிடத்தில் பால்கனி மேல்கூரை இடிந்து விழுந்தது

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பு பகுதி கட்டிடத்தின் பால்கனி மேல்கூரை இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம் மாவட்ட கல்வித்துறை அலுவலகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் என பல்வேறு கட்டிடங்கள் உள்ளே அமைந்திருக்கின்றன.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட  ஏ பிளாக் பி பிளாக் சி பிளாக் டி ப்ளாக் என பல்வேறு பிரிவு கட்டிடங்கள் உள்ளன. இங்கு உள்ள கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளதாக புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லையாம். இந்த நிலையில் நேற்று திடீரென மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் லேசான மழை தொடங்கியது.

அதில் விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் சி பிளாக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள பால்கனி மேல்கூரையின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. அப்போது அருகில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது அரசு ஊழியர்கள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: