காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாப் நபி ஆசாத்..!!

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாப் நபி ஆசாத், காங்கிரசில் இருந்து விலகினார். காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி அறிவித்துள்ளார். அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

ஏற்கனவே கட்சியில் இருந்து மூத்த தலைவராக இருந்த கபில் சிபில் உள்ளிட்டோர் அடுத்தடுத்து விலகியிருக்கக்கூடிய நிலையில், குலாம் நபி ஆசாத் தற்போது விலகியிருக்கிறார். குலாம் நபி ஆசாத், 1973ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் பாலாசா பகுதி செயலாளராக அரசியலில் நுழைந்தார்.  படிப்படியாக பல்வேறு பதவிகளை பிடித்து முன்னேறிய அவர், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராகவும் நீண்டகாலம் இருந்தவர். இந்நிலையில், நீண்டகாலமாக கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த குலாப் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து முழுமையாக விலகினார்.  ராஜினாமா செய்வதற்கான காரணம் குறித்து வெளிப்படையான தகவல் தெரிவிக்கவில்லை. குலாப் நபி ஆசாத்தின் இத்தகைய முடிவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Related Stories: