117 ஆண்டு பழமையான லெமேர் பாலம் உறுதி தன்மை கேள்விக்குறி: ஆல, அரச மர செடிகளால் புனரமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

காரைக்கால், ஆக.25: ஆல, அசர மர செடிகளால் 117 ஆண்டு பழமையான லெமேர் பாலத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இதை புனரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். பிரெஞ்சு. இந்திய ஆதிக்கத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலகங்கள், கட்டிடங்கள், ஆற்று பாலங்கள் மற்றும் சாலைகள் கட்டமைக்கப்பட்டனர். காலப்போக்கில் ஒரு சில கட்டமைப்புகள் சேதமடைந்து பின்னர் அரசின் முயற்சியால் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் காரைக்காலில் 117 ஆண்டுகள் பழமை வாய்ந்த \”லெமேர் பாலம்\” ஒன்று. காரைக்காலில் பிரஞ்சு ஆட்சியாளர் காலத்தில் J.லெமேர் என்பவர் ஆளுநராக இருக்கும் போது 1905ம் ஆண்டு மார்ச் மாதம் வாஞ்சியாற்றின் குறுக்கே பாலம் கட்ட துவங்கினார்கள். பின்னர் அதே ஆண்டு 1905 டிசம்பர் 31ம் தேதி பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. அன்றைய பிரஞ்சு ஆளுநர் பெயரிலேயே \”லெமேர் பாலம்\” என அழைக்கப்பட்டது. ஏறக்குறைய 117 ஆண்டுகளை கடந்த நிலையில் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

காரைக்கால் நகர பகுதி மக்களையும், பச்சூர், தருமபுரம், புதுத்துறை உள்ளிட்ட அக்காலத்து கிராமப்புற மக்களையும் இணைக்கும் விதத்தில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. நூறு ஆண்டுகள் தாண்டி நிலைத்து நிற்கும் \”லெமேர் பாலத்தின்\” உறுதித்தன்மை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

லெமேர் பாலம் தூண்களின் இருபுறமும் பாலத்தின் உறுதி தன்மையை சீரழைக்கும் விதமாக முளைத்து வரும் ஆல, அரச செடிகளை முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் இஸ்மாயில் கூறுகையில், பழமை வாய்ந்த லெமேர் பாலத்தில் அரச மற்றும் ஆல மர வேர்கள் முளைத்து தற்போது மர, செடிகளாக வளர்ந்து உள்ளது.

மேலும் செடிகள் வளர்ந்தால் அது பாலத்தின் உறுதி தன்மையை கெடுத்து விடும். மேலும் செடிகளின் வேர்கள் பெருகினால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பாலம் பயம் நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும். இந்த பாலத்தில் தினமும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தை உபயோகித்து வருகின்றனர். வரும் காலம் மழை காலம் என்பதால் ஆற்றில் நீரின் அளவு அதிகரித்தல் மேலும் நிலைமை மோசமாகும். எனவே பாலத்தின் இருபுறமும் மண்டிக்கிடக்கும் ஆல, அரச மர செடிகள் பொதுப்பணித்துறை நிர்வாகம் அகற்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அகற்றப்படும் செடிகளை ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் நட்டு பராமரிக்க பட வேண்டும் என கூறினார்.

Related Stories: