தமிழகத்தில் பாஜ தொடர்ந்து அராஜக போக்கில் ஈடுபடுகிறது: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை: தமிழகத்தில் பாஜ அராஜக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கே.பாலகிருஷ்ணன் கூறினார். மதுரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு தனது அறிக்கையை தமிழக முதல்வரிடம் கொடுத்துள்ளது. அதில், இச்சம்பவத்திற்கு காரணமான அப்போதைய கலெக்டர், ஐஜி, டிஐஜி, எஸ்பி, உள்பட 17 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, விசாரணைக்குழு அறிக்கையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து, தற்போது ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் உள்ள விபரங்கள் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சம்பவத்தில், ஒரு காவல்துறை ஆய்வாளர் மட்டுமே குற்றவாளி என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. சிபிஐ முழு உண்மையை மூடி மறைத்துள்ளது. ஆலைக்கு சாதகமாக செயல்பட்டது போல் உள்ளது. இந்த அறிக்கையை தாக்கல் செய்த, விசாரணை அதிகாரிகளுக்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறேன். பாஜ தமிழகத்தில் அராஜக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பாஜ எப்படிப்பட்ட அமைப்பு என்பதை முன்னாள் தலைவர் டாக்டர் சரவணனே கூறியுள்ளார். மதுரை விமான நிலைய பிரச்னையில் வழக்கு தொடுத்தால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: