பில்கிஸ் பானு குற்றவாளிகளில் நல்ல பிராமணர்கள் இருந்ததால் விடுதலை: பாஜ எம்எல்ஏ சர்ச்சை கருத்து

அகமதாபாத்: குஜராத்தில் 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடந்த கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடைய குழந்தை உட்பட  குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களை சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான ஆய்வுக்குழுவில் இடம் பெற்ற கோத்ரா தொகுதி பாஜ எம்எல்ஏ ரவுல்ஜி கூறுகையில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படிதான் நாங்கள் முடிவு எடுத்தோம். குற்றவாளிகளின் நடத்தையை ஆய்வு செய்து முடிவு செய்யும்படி நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம். அதன்படி, சிறையில் இவர்களின் நடத்தை நன்றாக இருந்ததை உறுதி செய்தோம். இந்த 11 பேரில் சிலர் பிராமணர்கள். அவர்களுக்கு வெளியுலகில் நன்மதிப்பு இருந்ததால் விடுதலை செய்தோம்’ என்று கூறினார். இது, பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

Related Stories: