கீழக்கரை பகுதியில் குப்பைகளால் மாசடையும் கடல்

கீழக்கரை: கீழக்கரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் செய்கின்றனர். கீழக்கரை கடற்கரையை ஓரங்களில் உடைந்த படகு மரத்துண்டுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து மோசமான நிலையில் இப்பகுதி உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கீழக்கரை கடல் பகுதியிலும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக மிதக்கின்றன. இவ்வாறு, தொடர்ந்து கடலில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பையும் அதிகரித்து வருவதால், மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து மீனவர்கள் கூறியதாவது: கீழக்கரை கடற்கரை செல்லும் வழியெங்கும் குப்பைக் குவியலும் பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்துள்ளன. கடலிலும், கழிவுப் பொருட்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் உள்ளன. மீன் பிடிக்கும் வலைகளில் சில நேரங்களில், பிளாஸ்டிக் மற்றும் குப்பை மாட்டிக் கொள்ளும். கடந்த சில மாதங்களில் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களின் அளவு அதிகரித்துள்ளது.

Related Stories: