குஜராத் குற்றவாளிகள் விடுதலை: பாஜக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்...

டெல்லி: பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள் என்றும் அவர்கள் நல்ல பழக்கவழக்க உடையவர்கள் என்றும் பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதில், தாகோடு மாவட்டம் ராந்திப்பூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது கர்ப்பிணி இஸ்லாமிய பெண்ணான பில்கிஸ் பானு 11 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது 3 வயது மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த நிலையில் சுந்திர தினத்தன்று பெண் விடுதலை குறித்து பிரதமர் மோடி சில மணி நேரங்களில் இந்த 11 பேரும் குஜராத் மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய கொடிய குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை வாயிலில் ஆரத்தி எடுத்து இனிப்பு வழங்கி வரவேற்பு அழைக்கப்பட்டது. குற்றவாளிகள் முன் விடுதலை குறித்து கடும் கண்டனம் தெரிவித்து வரும் காங்கிரஸ் போன்ற எதிர் கட்சிகள் பிரதமருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் இருந்த பாஜக எம்.எல்.ஏ. ராகுல் ஜி விடுவிக்கப்பட்ட 11 பெரும் பிராமணர்கள் என்றும், பொதுவாகவே பிராமணர்கள் நல்ல பழக்கம் உடையவர்கள் என்றும், தவறான நோக்கத்தில் அடிப்படையிலேயே அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்களை ஆதரிப்பது பாஜகவின் அற்ப மனநிலையை காட்டுவதாக கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது போன்ற அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா என்றும் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக எம்.எல்.ஏ. ராவுல்ஜியின் விளக்கம் அக்கட்சியின் தரம் தாழ்ந்த செயலை கட்டுவதாகவும், பாலியல் வழக்கு குற்றவாளிகளை பாஜக ஆதரிப்பது ஒன்றும் புதியது அல்ல என்றும் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல பாதிக்கப்பட்ட பில்கீஸ் பானோ ஒரு பெண்ணை இல்ல முஸ்லிமா என்பதை தேசமே முடிவு செய்யட்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா வேதனையுடன் கூறியுள்ளார்.               

Related Stories: