மம்மூட்டியுடன் ஜெயசூர்யா சந்திப்பு

கொழும்பு: நடிகர் மம்மூட்டியை இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா சந்தித்து பேசினார்.‘கடுகன்னவா ஒரு யாத்ரகுறிப்’என்ற மலையாள படத்தில் மம்மூட்டி நடிக்கிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்புக்கு கொழும்புவுக்கு சென்றிருந்தார் மம்மூட்டி. இந்தியாவிலிருந்து மம்மூட்டி வந்திருப்பதை அறிந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, மம்மூட்டி தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தார்.

அங்கு மம்மூட்டியை சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் ஜெயசூர்யா கூறும்போது, ‘படப்பிடிப்புக்காக மம்மூட்டி வந்திருப்பதாக அறிந்தேன். இலங்கை சுற்றுலா தூதராக என்னை நியமித்துள்ளதால், மம்மூட்டியை சந்தித்து பேசினேன். அவர் ஒரு சிறந்த நடிகர். மம்மூட்டியை போல் மற்ற இந்திய நடிகர்களும் இலங்கைக்கு வர வேண்டும். இங்கு படப்பிடிப்புகளையும் நடத்த வேண்டும். இலங்கையில் இந்திய படங்களுக்கு எப்போதும் மக்களின் ஆதரவு இருக்கிறது. அது தொடரும்’என்றார்.

Related Stories: