மக்கள் தொகையை உயர்த்த திட்டம், பத்து பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு; ரஷ்ய அதிபர் புடின் அதிரடி

மாஸ்கோ: ரஷ்யாவில் பத்து குழந்தைகள் பெறும் பெண்களுக்கு அதிபர் புடின் ரூ.13 லட்சம் பரிசு அறிவித்துள்ளார். ரஷ்யாவின் மக்கள் தொகை படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தொற்றால் 3.6 லட்சம் பேர் இறந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும்  உக்ரைன் போரிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா  இழந்துள்ளது. இதன் காரணமாக, ரஷ்யாவின் மக்கள் தொகையை மேலும் குறைத்துள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 14.5 கோடிதான். மக்கள் தொகை குறைவதால், அதிபர் புடின் கவலை அடைந்துள்ளார்.

எனவே, மக்கள் தொகையை  அதிகரிக்க, அவர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு ரூ.13 லட்சம் பரிசுத் தொகையும், ‘அன்னை நாயகி’என்ற பட்டமும் வழங்கப்பட உள்ளது. ஆனால்,‘இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில், ரூ.13 லட்சம் பரிசுக்காக யார் 10 குழந்தைகளை பெற்று வளர்ப்பார்கள்?’என்று நிபுணர்கள் விமர்சித்துள்ளனர். ரஷ்யாவில் 1947ம் ஆண்டிலேயே இந்த பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டு, 1991 வரை அமலில் இருந்தது. இத்திட்டத்தில் 4 லட்சம் பெண்கள் பரிசு பெற்றுள்ளனர்.

Related Stories: