நெல்லையில் நாளை ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீடு

நெல்லை: சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் நாளை (20ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணி மண்டபத்தில் நாளை காலை 9 மணிக்கு அமைச்சர்கள், தமிழக, புதுச்சேரி கவர்னர்கள், ஒன்றிய அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து பாளை. கேடிசி நகர் மகராசி மஹாலில் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடக்கிறது. கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சல் தலை வெளியிட, தெலங்கானா கவர்னர் தமிழிசை பெற்றுக் கொள்கிறார்.

Related Stories: