அடுத்த சர்ச்சை!: கும்பகோணம் அருகே மின் கம்பங்களை அகற்றாமலே போடப்பட்ட சாலை..விபத்து ஏற்படும் அபாயம்..!!

தஞ்சை: கும்பகோணம் அருகே மின் கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்க பணிகளை முடித்ததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே கொற்கை, பம்பைப்படையூர், தென்னூர், பட்டீஸ்வரம் சாலையை அகலப்படுத்தும் பணி சமீபத்தில் நடைபெற்றது. தென்னூரில் பழைய சாலையின் ஓரத்தில் இருந்த 8 மின் கம்பங்களை அகற்றாமல் அப்படியே சாலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ள இந்த சாலையில், தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

சென்டர் மீடியன் இல்லாத நிலையில், சாலைக்கு நடுவே மின் கம்பங்கள் அமைத்திருப்பது விபத்து நேரிட வழி வகுக்கும். எனவே விபத்து ஏற்படும் முன்னர் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றி அவற்றை சாலை ஓரத்தில் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக பல இடங்களில் இருசக்கர வாகனங்கள், அடி பம்ப்-ஐ அகற்றாமல் சாலை அமைப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த வரிசையில் மின் கம்பங்களும் இணைந்துள்ளன.

Related Stories: