கிராமசபை கூட்டங்களில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க தீர்மானம்

கமுதி :  கமுதி அருகே பாக்குவெட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருங்குளம் கிராமத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊர் நல அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் ராஜேஸ்வரி, மாநில ஊரக வாழ்வாதார வட்டார இயக்க மேலாளர் மயில்ராஜ், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் காளிகண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் ஊராட்சி நிர்வாகம் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது. இதில் ஜல்ஜீவன் திட்டம்,பிளாஸ்டிக் ஒழிப்பு,அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு போன்றவை குறித்த தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதே போல் கீழராமநதி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பழனிஅழகர்சாமி, தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் மைதீன், ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் சத்யாகனி மற்றும் வார்டு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் முகம்மதுஹக்கீம் அனைவரையும் வரவேற்று, ஊராட்சி நிர்வாக அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் சுகாதாரம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற தீர்மானங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நெடுங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் முத்துராமு அனைவரையும் வரவேற்று பேசினார். காத்தனேந்தல் ஊராட்சியில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலு முன்னிலை வைத்தார்.ஊராட்சி செயலர் மூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.

உடையநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தனுஷ்கோடி முன்னிலை வைத்தார். ஊராட்சி செயலர் ஜெயபாரதன் வரவேற்று பேசினார். இதேபோல் கமுதி பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆனையூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன் தலைமை தாங்கினார்.

யூனியன் அலுவலக கணக்காளர் தெய்வமணிகண்டன் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் ராமநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், சுகாதாரம்,மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் ஊராட்சி நிர்வாகம், குடிநீர், சுகாதாரம் குறித்து அறிக்கை வாசித்தார். இதில் பிளாஸ்டிக் ஒழிப்பு, பிரதம மந்திரி குடியிருப்பு போன்றவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: