ஊட்டியில் மின் கம்பங்களில் படர்ந்த செடி,கொடிகள் வெட்டி அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி :  ஊட்டி ஸ்டேட் பேங்க் லைன் செல்லும் சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் செடி கொடிகள் சூழ்ந்தும், மின் கம்பிகள் உரசியபடியே செல்வதால் விபத்து ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் கமர்சியல் சாலையில் இருந்து ஸ்டேட் ேபங்க், ஜி1 காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எல்ஐசி., அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு செல்ல நடைபாதை மற்றும் சாலை உள்ளது.

கமர்சியல் சாலையில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு நடைபாதையும், அதன் பின்பு தார் சாலையும் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான தொழிலாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், லாட்ஜ்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தவாறே இருக்கும். இந்நிலையில் இப்பகுதியில் சாலையோரத்தில் ஸ்ேடட் வங்கி தடுப்புச்சுவரை ஒட்டி மின்கம்பம் உள்ளது.

பழமையான இந்த மின் கம்பத்தை சுற்றிலும் கீழிருந்து மேல் பகுதி வரை செடி,கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன. இதுதவிர பசுமையாக கொடிகள் மின்கம்பிகளிலும் படர்ந்துள்ளது. பல இடங்களில் மின் கம்பிகள் மீது செடிகள் உரசியபடியே செல்கின்றன. இதனை அகற்றிட மின்வாரியம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் கண்டு காணாமலேயே உள்ளது. மேலும் அண்மையில் பெய்த மழை காரணமாக செடி கொடிகள் சாய்ந்து மின்கம்பிகள் சேதமடைந்து தாழ்வாக செல்கின்றன.

இதனால் பொதுமக்கள் அதிகளவில் இவ்வழியாக நடந்து செல்லும் நிலையில் பொதுமக்களோ அல்லது கால்நடைகளோ எதிர்பாராத விதமாக தொடும்பட்சத்தில் விபத்து ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. எனவே மின் கம்பத்தின் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை வெட்டி அகற்றிட மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: