ஊட்டி களை கட்டியது 3 நாட்கள் தொடர் விடுமுறையில் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விசிட்

ஊட்டி: சுதந்திர  தின விழா விடுமுறை மற்றும் வார விடுமுறை என மூன்று நாட்கள் விடுமுறை வந்த  நிலையில், நிலையில் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளனர்.

ஊட்டிக்கு  நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனினும்  பள்ளி தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறைகள் இரு நாட்களுக்கு மேல் வந்தால்  தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

 குறிப்பாக, அண்டை மாநிலமான கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் வரும்  சுற்றுலா பயணிகள் கூட்டமே அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், வார  விடுமுறை மற்றும் சுதந்திர தின என மூன்று நாட்கள் அரசு விடுமுறை கிடைத்த  நிலையில் சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டுள்ளனர். கடந்த மூன்று  நாட்களாக முக்கிய சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும்  ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சுற்றுலா  பயணிகள் வாகனங்களால், ஊட்டி நகரின் முக்கிய சாலைகளான கமர்சியில் சாலை,  எட்டினஸ் சாலை மற்றும் பூங்கா செல்லும் சாலைகளில் வாகன நெரிசல்  காணப்பட்டது. பல நாட்களுக்கு பின் தற்போது ஊட்டியில் வெயில் அடிக்கும்  நிலையில், அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன்  வலம் வந்தனர்.

இரு மாதங்களுக்கு பின் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள்  குவிந்துள்ள நிலையில், ஊட்டி நகரில் உள்ள வியாபாரிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த 13ம்  ேததி (சனிக்கிழமை) 8 ஆயிரத்து 22 பேர் வந்திருந்தனர். நேற்று முன்தினம் 14ம்  தேதி (ஞாயிற்று கிழமை)16 ஆயிரத்து 435 பேரும், நேற்று சுமார் 15 ஆயிரம்  வந்திருக்க வாய்ப்புள்ளது.

எனவே, கடந்த மூன்று நாட்களில் 40  ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல்  பூங்காவிற்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. நேற்று பிற்பகலுக்கு மேல் சொந்த  ஊர்களுக்கு சுற்றுலா பயணிகள் திரும்ப ஆரம்பித்தனர். இதனால், ஊட்டி - கோவை  சாலை, ஊட்டி - மைசூர் மற்றும் கேரளா மாநிலம் செல்லும் சாலைகளில் வாகன  போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

Related Stories: