பெரியாறு அணையில் தேசிய கொடியேற்றிய தமிழக அதிகாரிகள்

கூடலூர்: சுதந்திர தின விழாவையொட்டி பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறையினர் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடினர். தமிழக, கேரள எல்லையில், தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டி, அணையின் நுழைவுப்பகுதியான ‘பைலான்’ மேல் பெரியாறு அணை உதவி செயற்பொறியாளர் குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக உதவிப்பொறியாளர்கள், பெரியாறு அணை ஊழியர்கள், அணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கலந்துகொண்டனர்.

பின்னர் தமிழக அதிகாரிகள், கேரள போலீசாருக்கு இனிப்புகளை வழங்கினர். இதேபோல், தேக்கடியிலுள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் உதவிப்பொறியாளர் ராஜகோபால் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மோகன்ராஜ், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: