நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் அரசு சொகுசு பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியிருக்கின்றனர். திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே அரசு சொகுசு பேருந்து விபத்துகுள்ளானது.

இந்த அரசு பேருந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லைப் பகுதியான லட்சுமிபுரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அருகே இருந்த பள்ளத்தில் அரசு சொகுசு பேருந்து திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

இதில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அதன்பிறகு உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி போலீசார் படுகாயம் அடைந்த அனைவரையும் அருகே உள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இந்த விபத்தானது லட்சுமிபுரம், பங்களாமேடு, நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகின்றது.

Related Stories: