பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்

திருவள்ளூர்: ஆடி மாத இறுதி ஞாயிறையொட்டி திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்து வருவதால் அந்த பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

சுயம்புவாக எழுந்தருளியுள்ள இந்த பவானி அம்மனை வழிபடுவதற்காக ஆடி மாதத்தில் பக்தர்கள் வருவது வாடிக்கையாகும். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14 வாரம் வரை பெரியபாளையத்தில் திருவிழா கோலமாக காணப்படும். இருந்தபோதிலும் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரியபாளையம் பவானி அம்மனை தரிசிப்பை காண பக்தர்கள் காலையிலிருந்து வந்து கொண்டிருகின்றனர்.

பக்தர்கள் தங்களது சொந்த வாகனத்தில் வந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்  மட்டுமில்லாமல் பிற மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் பிற மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவிலிருந்தும் ஏராளமானோர் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு வந்து கொண்டிருப்பதால் பெரிய பாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுருக்கிறது. பவானி அம்மன் கோயிலை ஒட்டி அமைந்துள்ள மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரம் வாகனங்கள் கடந்து செல்வதற்கு தேவைப்படுகிறது.

அதைபோன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியும் மற்றும் பொங்கல் வழிப்பாடு செய்து வேப்பஞ்சேலை உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை முடித்துவிட்டு செல்கின்றனர். வழக்கமாக 14 வாரங்கள் இந்த பெரிய பாளையத்தில் பக்தர்கள் வந்து சென்றாலும்  ஆடி மாதத்தில் வந்தாக வேண்டும் என்பதால் அனைத்து தரப்பும் மக்களும் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும், பொதுமக்களும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்து அனுப்பி வைத்தனர். அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: