தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது

திருவாரூர்: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம் நடத்தியதாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக திருவாரூர் மாவட்ட பாஜக செயலாளர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவிக அரசு கலை கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக பாஸ்கர் மீது புகார் எழுந்தது. ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக செயலாளர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவிக அரசு கலை கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டப்படிப்புக்கான தேர்வு கடந்த 30-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வின் போது தேர்வின் கண்கானிப்பாளர் ஒவ்வொருவரின் அடையாள அட்டையை வைத்து வருகை பதிவேட்டை சரிபார்த்து கையெழுத்து வாங்குவது வழக்கமாகும். இந்த நிலையில் கண்கானிப்பில் ஈடுபடும் போது அடையாள அட்டையில் இருந்த பேரும் வருகை பதிவேட்டில் உள்ள புகைப்படமும் வேறு விதமாக இருந்தது.

இதையடுத்து அவரது ஆதார அட்டையை வாங்கி பார்த்த போது தேர்வு எழுத வந்துள்ள நபர் வேறு ஒருவர் என அறியப்பட்டது. பின்னர் முதன்மை கண்கனிப்பாளர் நாகரத்தினம் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து புகார் மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக திருவாரூரை சேர்ந்த திவாகர் மாதவன் என்பவர் தேர்வு எழுத வந்தார் என்பது தெரிய வந்தது. விசாரணையின் போது நேற்றைய தினம் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட திவாகரன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ரமேஷ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அதன் பிறகு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். இந்த ஆள்மாறாட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட பாஜக தலைவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருந்தபோதிலும் போலீசார் விசாரணையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து டி.எஸ்.பி. சிவராமன் தலைமையில் மடப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சென்று பாஸ்கரை கைது செய்து நகராட்சி காவல்துறைக்கு கொண்டு வந்தனர். இந்த ஆள்மாறாட்டத்தை குறித்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: