சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு

சென்னை: சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். கொள்ளையை அரங்கேற்றிவிட்டு மோட்டார் வாகனத்தில் தப்பிச்சென்றவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வங்கிக் கொள்ளை கும்பலை பிடிக்க சென்னை அருகே உள்ள மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் நகை அடகு வழங்கும் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் கொள்ளை நடந்துள்ளது. அந்த வங்கியில் ஏற்கனவே பணியாற்றிய மக்கள் தொடர்பு அதிகாரியும், அதேபோன்று மண்டல மேலாளர் முருகன் என்பவரே இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்.

வங்கியின் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்து அவரை சிறை வைத்துவிட்டு மேனேஜர் மற்றும் ஊழியர்களை அறையில் கட்டிப்போட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளார். அந்த வங்கியில் இருந்து மொத்தம் 32 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு கூட்டாளிகளுடன் தப்பி சென்றார். இந்த கொள்ளையில் மொத்தம் 3 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கொள்ளையர்கள் தங்களை போலீசார் தங்களை பிடித்துவிடக்கூடாது என்பதற்காக வங்கியினுடைய சிசிடிவியின் முக்கிய பாகங்களையும் கொள்ளையர்கள் எடுத்துச்சென்றுள்ளார். எனவே சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் போலீசார் சோதகனையில் ஈடுபட்டுள்ளனர்.    

இந்த கொள்ளை சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.  

Related Stories: