செய்யூர் அருகே அதிமுக தலைவரின் மகனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கட்சியினர் திடீர் சாலை மறியல்

செய்யூர்: அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகனை தாக்கியவர்களை கைது செய்யகோரி மதுராந்தகம் - கூவத்தூர் சாலையில் அதிமுகவினர் திடீர் சாலை மறியலில்  ஈடுபட்டனர். இதனால், அப்பகுதயில் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், பவுஞ்சூர் அடுத்த கே.நெல்வாய் ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த ஏழுமலை மனைவி அஞ்சாலை என்பவர் பதவி வகித்து வருகிறார். ஊராட்சி மன்ற தலைவரின் மகனான பிரித்திவிராஜ் ஊராட்சி பணிகள் மற்றும் செயல்பாடுகளை வழி நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  இவ்வூராட்சியில் 2005ம் ஆண்டு வரவு செலவு கணக்கில் முறைகேடு இருப்பதாக கூறி முறைகேடு குறித்து, கடுகப்பட்டு கிராமத்தை சேர்ந்த நந்தகோபால் என்பவர் நடந்த முறைகோடு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு மனு அளித்துள்ளார்.  இவர் அளித்த மனு குறித்து தகவல் அறிந்த பிரித்திவிராஜ் அவரது தம்பி ஆனந்தராஜ் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் நந்தகோபால் வீட்டிற்கு சென்று தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை இலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறவிருந்த சிறு தொழில் செய்ய வங்கி கடன் வழங்கும் விளக்க கூட்டத்திற்கு வந்த கே.நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஏழுமலை, மகன்கள் பிரித்திவிராஜ், அரவிந்த்ராஜை எதிர் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஏழுமலை தன்னையும் தனது மகன்களையும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கோரி அதிமுக ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் - கூவத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பவுஞ்சூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அணைக்கட்டு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அவர்கள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: