பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசியக்கொடியை ஏற்ற அனுமதி மறுப்பது அதிர்ச்சியாக உள்ளது: அண்ணாமலை அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி,பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைச் சொல்லி சுதந்திர தினத்தன்று நமது தேசியக் கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இதனையடுத்து, கள்ளக்குறிச்சி கலெக்டருடன் மாநில துணைத் தலைவர் சம்பத், சுதா வரதராஜிவை நேரில் சந்தித்த பிறகு, இது தொடர்பாக புகார் மனு அளித்தனர். தற்போது அவர், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற தீர்வு எட்டப்பட்டுள்ளது. 24 மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாது 22 ஊராட்சிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு அமர இருக்கை இல்லை. 42 ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர்களின் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: