சிறுமிக்கு பாலியல் தொல்லை 84 வயது முதியவருக்கு சிறை

தஞ்சை: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரம் கவாரக்கார தெருவை சேர்ந்தவர் ராமு (84). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு 2019ம் ஆண்டில் மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். இதுதொடர்பாக தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன்  ராமுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories: