வருமானத்துக்கு அதிகாமாக 315% சொத்து குவித்ததாக வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை

நாமக்கல்: நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்ஏ. கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகிறது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.72 கோடி சொத்து சேர்த்துள்ளதாக கே.பி.பி. பாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. கே.பி.பி. பாஸ்கர் தனது பெயரிலும் தனது மனைவி, பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் சொத்து வாங்கி குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் கே.பி.பி. பாஸ்கர், அவரது மனைவி உமா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.எல்ஏ. கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகிறது. நாமக்கல், மதுரை, திருப்பூரில் 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 24 இடங்களில், மதுரையில் 1 இடத்திலும், திருப்பூரில் 1 இடத்திலும் சோதனை நடைபெறுகிறது.

Related Stories: