மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த கலெடிப்பேட்டை, அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் அலமேலு (42). அவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்த நிலையில், தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இவர்களுக்கு மோனிஷா, வசுந்த்ரா என 2 மகள்கள் உள்ளனர். இருவரும் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டனர். இந்நிலையில், வீட்டில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி அலமேலு மட்டும் இருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் அவர்களது வீட்டிலிருந்து அலமேலுவின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால், கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், சிறிது நேரத்தில் ரமேஷ் வீட்டிலிருந்து வெளியே வந்தவர்.

 அங்கிருந்த கூட்டத்தை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார். அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் அலமேலு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த அலமேலு உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ரமேஷ் சிறிது நேரத்தில் குன்றத்தூர் காவல் நிலையம் வந்து சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது.

இதனால், எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டும் வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என்னிடம், அலமேலு கோபித்துக் கொண்டு அயனாவரத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்தவரிடம், சமாதானம் பேசி நேற்று முன்தினம், வீட்டிற்கு அழைத்து வந்ேதன். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் எங்கள் இருவருக்குமிடையே வாய்தகராறு  முற்றியது. இதில் ஆத்திரமடைந்த நான் வீட்டிலிருந்த கடப்பாரையை எடுத்து மனைவியின் தலையில் அடித்து கொலை செய்தேன் என்றார். மேலும், இது குறித்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: