ஊட்டி அருகே சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி பலி

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரக்காடு பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கிஷாந்த் என்பவர் மனைவி, குழந்ைத சரிதா (4) ஆகியோருடன் வசித்துள்ளார். நேற்று கிஷாந்த் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற நிலையில் தாயுடன் இருந்த சிறுமி சரிதா, இயற்கை உபாதையை கழிக்க அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றதாக தெரிகிறது.

அப்போது புதர் மறைவில் இருந்து சிறுத்தை சரிதாவை தாக்கியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு தோட்ட தொழிலாளர்கள் ஒன்றுகூடி சத்தம் எழுப்பவே சிறுத்தை  வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது. படுகாயமடைந்த சிறுமி  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாள்.

Related Stories: