வகுப்பறையில் மயங்கிய பிளஸ் 2 மாணவி சாவு

விக்கிரவாண்டி: விழுப்புரம் அருகே அரசு பள்ளி பிளஸ்2 மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு அருகே மல்லிகைபட்டு கிராமத்தில் வசிப்பவர் பெருமாள், கூலி தொழிலாளி. இவரது மகள் அஸ்வினி (17) மாம்பழப்பட்டு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இவர் நேற்று காலை பள்ளி வகுப்பறையில் மாணவி அஸ்வினி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சக மாணவிகள், ஆசிரியர்கள் அருகே உள்ள காணை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவியிடம் விசாரித்தபோது, பூச்சி மருந்து குடித்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் மேல்சிகிச்சைக்காக  விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து காணை போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து சக மாணவிகள், ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: