மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் 60 சதவீத மானியத்தில் கடனுதவி: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட மீன்வளத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகிற்கு மகளிர் பிரிவினருக்கு 60% மானியத்தில் ரூ.12 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதுபோல் ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப் பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு மகளிர் பிரிவினருக்கு 60% மானியத்தில் ரூ.15 லட்சம் வழங்கப்பட உள்ளது. மீன்விற்பனை அங்காடி (அலங்கார மீன்வளர்ப்பு-மீன் அருங்காட்சியகம் உள்ளடங்கியது) ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ.6 லட்சம் வழங்கப்படுகிறது.

கொல்லைப்புற அலங்கார மீன்வளர்ப்பு அலகு (கடல் அல்லது நன்னீர்) ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.1.20 லட்சம் வழங்கப்பட உள்ளது. புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.2.80 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மகளிருக்கு 60% மானியத்தில் ரூ.4.20 லட்சம் வழங்கப்படுகிறது. புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.2.80 லட்சமும், ஆதிதிராவிடர் மகளிருக்கு 60% மானியத்தில் ரூ.4.20 லட்சமும் வழங்கப்படுகிறது. நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்த்திட உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.1.60 லட்சமும் ஆதிதிராவிடர் மகளிருக்கு 60% மானியத்தில் ரூ.2.40 லட்சமும் வழங்கப்படுகிறது.

சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்த்திட ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.3 லட்சமும், ஆதிதிராவிடர் மகளிருக்கு 60% மானியத்தில் ரூ.4.50 லட்சமும் வழங்கப்படுகிறது.

கூண்டுகளில் கடல் மீன்வளர்த்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு ரூ.5 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.2 லட்சம் வழங்கப்பட உள்ளது. பயோபிளாக் குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கு ரூ.18 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.7.20 லட்சம் வழங்கப்படுகிறது.

புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 0.5 ஹெக்டேருக்கு ரூ.3.50 லட்சம் செலவினத்தில் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியத்தில் ரூ.2.10 லட்சம் வழங்கப்படுகிறது. நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கு ரூ.14 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.5.60 லட்சம் வழங்கப்படுகிறது. 250 முதல் 1000 ச.மீ பரப்புள்ள பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கு (1000 சமீ) ரூ.36 ஆயிரத்தில் 50% மானியம் வழங்கப்படுகிறது.

எனவே, விருப்பமுள்ளவர்கள் காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்1/269, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை-600115. அலு வலகத்தில் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் 16ம்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: