தூத்துகுடியில் முடிதிருத்தும் கலைஞரின் கடையில் நூலகம் திறப்பு: தொடர்ந்து வாசிப்போருக்கு முடி திருத்தத்தில் பாதி கட்டண சலுகை...!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சலூன் கடைக்காரர் ஒருவர் தமது முடிதிருத்தும் கடையில் 200 புத்தகங்களுடன் துவங்கிய நூலகம் 3 வருடங்களில் 3 ஆயிரம் புத்தககங்களாக அதிகரித்து, வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது. தூத்துக்குடியை சேர்ந்த புத்தக பிரியரான பொன்மாரியப்பன் புத்தககங்கள் வாசிக்கும் பழக்கத்தை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு தான், தான் நடத்தும் முடிதிருத்தும் கடையிலேயே சிறிய நூலகம் ஒன்றை தொடங்கினார். தாங்கள் வாசிக்கும் புத்தகத்தில் உள்ள நல்ல கருத்துகளை பதிவேட்டில் பதிய வைப்பதற்கும் வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துகிறார்.

தொடர்ந்து வாசிப்போருக்கு முடிதிருத்தும் கட்டணத்தில் பாதியை மட்டுமே பெற்றுக்கொள்கிறார். இதனால் சலூன் கடைக்கு புத்தகங்கள் படிக்க வாசகக்கூட்டம் படையெடுக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு 200 புத்தகத்துடன் துவங்கிய சலூன் நூலகம் தற்போது 3000 புத்தகங்களை கடந்து விரிவடைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களிடம் வாசிப்பு பழக்கம் அதிகரித்து முடிதிருத்தும் கலைஞர் மாரியப்பனின் கடை அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோலாக மாறியுள்ளது.

Related Stories: